fbpx

சொட்டைக்கு விக் வைத்து ஏமாற்றி திருமணம்..!! கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவன், மாமியார்..!!

சென்னை குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் அருகே பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவரது, மனைவி லோகப்பிரியா (26). இருவருக்கும், கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியதால், லோகப்ரியாவின் பெற்றோர் 30 சவரன் நகை, கோகுலகண்ணனுக்கு 6 சவரன் நகை மற்றும் கார் வாங்க ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு, கோகுலகண்ணன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கு, கோகுலகண்ணனின் தாய் ராஜேஸ்வரி (61) உடந்தையாக இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணையாக 10 சவரன் நகை வாங்கி வரும்படி மனைவி லோகப்ரியாவை கணவர் கோகுலகண்ணனும், மாமியார் ராஜேஸ்வரியும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதையறிந்த, லோகப்ரியாவின் பெற்றோர், அவர்களை அனுசரித்து செல்லும்படி கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லோகப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கேட்டு கணவனும், மாமியாரும் தனது மகளை கொலை செய்திருக்கலாம் என்றும் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கூடுதல் வரதட்சணை கொடுக்காததால், லோகப்பிரியாவை கணவரும், அவரது தாயும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் லோகப்ரியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் கோகுலகண்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில், இருவரும் கூடுதல் வரதட்சணை கேட்டு லோகப்பிரியாவை கொலை செய்து தற்கொலை நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். பிறகு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, திருமணத்திற்காக கோகுலகண்ணன் பெண் பார்க்க தொடங்கியதும் தனது சொட்டை தலைக்கு அழகான பெண் கிடைக்காது என எண்ணியுள்ளார். எனவே, ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்வதாக காட்டிக்கொண்டு வரதட்சணையாக நகை, ரொக்கப்பணம் அதிகம் வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, முதலில் தனது தலைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விக் வாங்கியுள்ளார். அதன்பிறகே பெண் பார்த்து லோகப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யாமல் ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், தனது தாயாருடன் சேர்ந்து 10 சவரன் நகை வாங்கி வரும்படி லோகப்பிரியாவை தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Chella

Next Post

அதிரடியாக உயரும் சுங்கக்கட்டணம்..!! சிலிண்டர் விலையில் பெரும் மாற்றம்..!! பொதுமக்கள் கடும் பாதிப்பு..?

Fri Mar 31 , 2023
புதிய நிதி ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நாளை முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சுங்க கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாளை முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10% வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்துள்ளது. 6 இலக்க எண் […]

You May Like