fbpx

எடப்பாடிக்கு செக்..!! சசிகலாவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பாஜக..!! பின்னணி என்ன..?

2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சாதாரண ஏழை கூட அதிமுகவில் பதவிக்கு வரலாம். ஆனால், திமுக-வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. திமுக-வில் குடும்பத்தில் உள்ள வாரிசுகளை பதவிக்கு கொண்டு வருவர். நான் ஜாதி பார்த்திருந்தால், பெங்களூருக்கு செல்லும்போது, பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்திருக்க மாட்டேன்.

அதிமுக-வுக்கு மேற்கு மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். எனவே, எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பதால், அவருக்கு முதல்வர் பதவி தந்தேன். அதிமுக 3-வது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்று விட்டது. தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது. அதிமுக முடிந்து விட்டது என நினைக்க முடியாது. என் என்ட்ரி ஆரம்பித்து விட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். விரைவில் பட்டிதொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து திரும்பியதும், அரசியலில் இருந்து விடை பெறுவதாக முன்பு சசிகலா அறிவித்ததற்கு, பாஜக அரசு மீதான பயமே காரணமாக பேசப்பட்டது. இந்நிலையில், அரசியலுக்கு மீண்டும் வருவதாக, அவர் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க முடியாது என தெரிந்த பாஜக, சசிகலாவை தூண்டிவிட்டுள்ளதா..? இல்லை ஜேசிடி பிரபாகர் போன்றோர் பின்னணியின் உள்ளனரா..? என பல சந்தேகங்களை எழுந்துள்ளது.

Read More : ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகர் சூரி..!! ’கருடன்’ திரைப்பட வசூல்..!! 15 நாட்களில் இத்தனை கோடியா..?

English Summary

Sasikala has vowed to form a Jayalalithaa government in 2026 assembly elections.

Chella

Next Post

மருமகனை கொலை செய்ய மாமனார் போட்ட ஸ்கெட்ச்..!! மகளை காதல் திருமணம் செய்ததால் வெறிச்செயல்..!!

Mon Jun 17 , 2024
The incident where the father-in-law planned to kill the son-in-law because he married his daughter for love has created a lot of excitement in Sengam area.

You May Like