fbpx

நோட்…! இ-சேவை மையத்தில் இந்த ஆவணம் பெற எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம் தெரியுமா…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!

வருவாய்த்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சான்றிதழ்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்தில்‌ இயங்கி வரும்‌ தனியார்‌ கணினி மையங்களில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக மட்டும்‌ உருவாக்கிய Citizen Login-ஐ முறையாக அரசு அனுமதி பெறாமல்‌ 20 வகையான வருவாய்‌ துறை சான்றுகள்‌, 6 வகையான முதியோர்‌ உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம்‌ செய்கிறார்கள்‌. அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ சான்றுகளில்‌ எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல்‌ மற்றும்‌ இடைதாகர்கள்‌ மூலம்‌ அதிக கட்டணம்‌ பெறுதல்‌ போன்ற பல முறைகேடுகள்‌ நடைபெறுவது வழக்கம்.

பொது இ-சேவை மையங்களில்‌ வருவாய்த்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சான்றிதழ்கள்‌ தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம்‌, ஓய்வூதிய திட்டங்கள்‌ தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம்‌, சமூக நலத்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம்‌, இணைய வழி பட்டா மாறுதல்கள்‌ தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு உட்பிரிவு இல்லாத மனு ஒன்றிற்கு ரூ.60-ம்‌, உட்பிரிவு உள்ள இனங்களுக்கு ரூ.120/-ம்‌ சேவை கட்டணமாக பெறப்படுகிறது.

மேலும்‌, பொதுமக்கள்‌ இடைத்தரகர்களை தவிர்த்து, அருகில்‌ உள்ள வட்டாட்சியர்‌ அலுவலக இ-சேவை மையங்கள்‌, கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள்‌, கிராம வறுமைஒழிப்பு சங்க இ-சேவை மையங்கள்‌ மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற தனியார்‌ இ-சேவை மையங்களை அணுக வேண்டும். சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு edm2dpi.tnega@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கும்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 1077-ஐ அழைத்து புகார்களை தெரிவிக்கலாம்‌.

Vignesh

Next Post

குடியரசு தின அணி வகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறும்...! மத்திய அரசு தகவல்...!

Mon Jan 23 , 2023
குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 2023 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, […]

You May Like