fbpx

சிவிங்கிப் புலிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது…! மத்திய அரசு தகவல்

சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச வனத் துறை, இந்திய வனவிலங்குகள் நிறுவனம் (WII) மற்றும் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிவிங்கிப் புலிகள் தொடர்பான வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூலமாக சிவிங்கிப் புலிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை மேற்பார்வையிட, சரிஸ்கா மற்றும் பன்னா புலிகள் காப்பகத்தில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சிவிங்கிப் புலிகள் திட்டத்தின் கீழ், ரேடியோ காலர் எனப்படும் கதிரியக்க கருவி பொருத்தப்பட்ட 20 சிவிங்கிப் புலிகள் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டன.

கட்டாய தனிமைக் காலத்திற்குப் பிறகு சிவிங்கிப் புலிகள் பெரிய, பரந்த அமைப்புகளுக்கு மாற்றப்பட்டன. தற்போது அவற்றில் 11 சிறுத்தைகள் சுதந்திரமான நிலையில் உள்ளன. இந்தியாவில் பிறந்த ஒரு குட்டி உட்பட 5 சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தலில் உள்ளன. இந்த சிவிங்கிப் புலிகள் அனைத்தும் பிரத்யேக கண்காணிப்புக் குழுவால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Vignesh

Next Post

Breaking news: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…..!

Mon Jul 17 , 2023
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் இருக்கின்ற பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. இவர் மீது போடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் இவரை சமீபத்தில் விடுதலை செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தற்போது இவர் தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. நீதிமன்றம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்து விடுதலை செய்துவிட்ட நிலையிலும், […]

You May Like