எவ்வளவுதான் போலீசாரும், பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பாபு என்ற தச்சு தொழிலாளிக்கு யுவராஜ் என்ற 16 வயது மகன் இருந்துள்ளார்.
பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது முன்பக்க படிக்கட்டில் தோன்றியபடி யுவராஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பஸ் சிறிது தூரம் நகர்ந்த நிலையில் நிலை தடுமாறி யுவராஜ் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சீக்கிய யுவராஜ் உயிரெழுந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.