fbpx

கள்ளக்காதலை கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரம் கள்ளக்காதலி செய்த செயல்…..! ஆத்திரத்தில் கள்ளக்காதலன் எடுத்து அதிரடி முடிவு அடுத்தது நடந்தது என்ன…..?

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கின்ற குள்ளன் பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு, திருமணம் ஆகி பல வருடங்கள் போன பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்த நிலையில் தான் அதிக பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரின் மனைவி பிரியா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாபின் மனைவிக்கு தெரிந்தவுடன் பிரதாப்பை வன்மையாக கண்டித்திருக்கிறார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் பிரியாவுடன் ஆன கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். பிரதாப் ஆகவே ஒரு கட்டத்தில் இது குறித்து ஆத்திரம் அடைந்த பிரதாபின் மைத்துனர்கள் பிரதாபை அடித்து உதைத்து அறிவுரை வழங்கியுள்ளனர். ஒரு வழியாக பிரியாவை சந்திப்பதையும் ஆவலுடன் பேசுவதையும் பிரதாப் மெல்ல, மெல்ல தவிர்த்து வந்தார்.

ஆனாலும் பிரியா பிரதாப்பை விடுவதாக இல்லை இதனை தொடர்ந்து, பிரதாப்பிடம் தொலைபேசி மூலமாக உரையாட முயற்சி செய்வதும் பிரதாப் பேசுவதை தவிர்ப்பதுமாக இருந்து வந்துள்ளார். இதற்கு நடுவே நேற்று பாலூர் சாலையில் பிரதாப் நின்று கொண்டிருந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ப்ரியா தன்னுடான தொடர்பை கைவிட்டதற்காக பிரதாப்பை ஆத்திரத்துடன் திட்டி இருக்கிறார். அவர் திட்டியதை அருகில் இருந்த பெண்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட பிரதாப் இன்று விடியற்காலை வேளையில் நேரடியாக விழாவின் மீட்டருக்கு சென்று மண்ணெண்ணெய் மற்றும் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னர் உள்ளிட்ட இரண்டையும் கலந்து பிரியாவின் முகத்தில் ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பலத்த தீக்காயம் அடைந்த பிரியாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோட பிரதாப்பை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியா தற்போது மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்….! செந்தில் பாலாஜி தரப்பின் அடுத்த நடவடிக்கை என்ன…..?

Sat Jul 15 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்க்கும் விதமாக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆக்குணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்ற ஒரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது இல்லை என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு […]

You May Like