ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.
கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 3 சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய கான்வே மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். 40 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 56 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய ரகானே, ஷிவம் டூபே ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிவம் டூபே 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 ரன்னில் அவுட் ஆனார். இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்து அசத்தியது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.