fbpx

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று மழை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

அட்டகாசம்...! தமிழகத்தில் 24 மணி நேரமும் இலவச மின்சாரம்...! எப்போது வழங்கப்படும்...? வெளியான தகவல்...!

Tue Mar 28 , 2023
2024 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் தற்போது 18,053 மெகாவாட் அளவுக்கு மின் தேவை உயர்ந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான தேவை 35 ஆயிரத்து 615 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. 18 மணி நேரம் விவசாயிகளுக்கு […]

You May Like