fbpx

Weather: தமிழகத்தில் இரவு நேரத்தில் பலத்த காற்று வீசும்.‌‌..! எல்லாம் கவனமா இருங்க மக்களே…!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்” என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.

Vignesh

Next Post

நாட்டின் மிக நீளமான கப்பல்... பிப்ரவரி 28-ம் தேதி பயணத்தை நிறைவு செய்ய உள்ளது...!

Sun Feb 26 , 2023
நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது. பிரதமர் மோடியால் ஜனவரி 13ம் தேதி வாராணாசியில் இருந்து கொடியசைத்துத் துவைக்கிவைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்பி கங்காவிலாஸின் பயணம் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இதையொட்டி, கப்பலுக்கு வரவேற்பு நிழ்ச்சியை நடத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும், […]

You May Like