fbpx

ஆரம்பம்…!வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக, வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இந்திய பெருங்கடல் பகுதியில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மறைந்த பிரபல நடிகர் மிஹிர் தாஸ் வீட்டில் மற்றொரு சோகம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Thu Jan 26 , 2023
மறைந்த ஒடியா நடிகர் மிஹிர் தாஸின் இளைய மகன் அக்லாந்த் தாஸ் காலமானார். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு உயிரிழந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். பழம்பெரும் ஒடியா திரைப்பட நடிகர் மிஹிர் தாஸ் ஜனவரி 11, 2022 அன்று இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

You May Like