fbpx

#Rain: தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை…!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 27-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல்‌ 3 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல்‌ 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல்‌ 29 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் அதிரடி உயர்வு..!! எந்த வங்கியில் தெரியுமா..?

Mon Apr 24 , 2023
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.20% வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.95% வட்டியும் வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள்: 7 நாட்கள் – 45 நாட்கள் : 3.50% […]

You May Like