fbpx

ஜுன் 1,2 ஆகிய தேதிகளில் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை முதல் வரும் ஜுன் 2-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்‌.

ஜூன்‌ 1 மற்றும்‌ 2 ஆகிய தேதிகளில்‌ மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால்‌ மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிரடி மாற்றம்...! மொத்தம் 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம்..‌.!

Tue May 30 , 2023
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தை தவிர்த்து மற்ற 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள […]

You May Like