fbpx

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..‌.! வெளுத்து வாங்க போகும் கனமழை..!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது‌.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

Woww... வீட்டுக் கடன் வாங்கும் நபர்களே...! ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க RBI உத்தரவு...!

Thu Sep 14 , 2023
வீட்டுக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இந்திய ரிசர்வ் வங்கி கேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி கடனைத் திருப்பிச் செலுத்திய உடனேயே சொத்து ஆவணங்களைத் திருப்பித் தருவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் போது சொத்து ஆவணங்களை வெளியிட கடன் வழங்குபவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், கடனளிப்பவர்கள் […]

You May Like