fbpx

தமிழகமே…! அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை மையம் கொடுத்த அப்டேட்…! எப்போது புயல் உருவாகும்…?

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 அதிகாலை வாக்கில் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

"வாங்கிய தங்கம் வீட்டில் தங்கவில்லையா.?" இந்தப் பரிகாரங்களை உடனடியாக செய்யுங்கள்.!

Fri Dec 1 , 2023
தங்க நகைகளை விரும்பாதவர்கள் யார் தான் இருக்க முடியும். குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவுதான் தங்க நகைகள் இருந்தாலும் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் என்றுமே குறையாது. எனினும் குடும்பங்களில் ஏற்படும் சில அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக வாங்கிய தங்கத்தை அடகு வைத்து பணம் ஈட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இப்படியான சூழ்நிலை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி காண்போம். வெள்ளிக்கிழமை அன்று சாமிக்கு பூஜை செய்யும் போது […]

You May Like