fbpx

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…! மழை குறித்த வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு.. இலவச ரேஷன் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு..

Wed Sep 21 , 2022
நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் உணவு பாதுகாப்பு […]

You May Like