fbpx

அடுத்த மழைக்கு ரெடி ஆகுங்க…! அந்தமான் கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…!

அந்தமான் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டநாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 7-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

"இனி இவருக்கு பதில் இவர் தான் " இசையமைப்பாளருக்கு புதிய பதவி - அண்ணாமலை அதிரடி...

Sun Dec 4 , 2022
பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்த நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராமை கடந்த சில நாட்களுக்கு முன் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார் காயத்ரி ரகுராம், மேலும் தன்னுடைய தலைவர் மோடி தான் என்றும், அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்து […]

You May Like