fbpx

யாரும் கடலுக்கு போக வேண்டாம்…! 50 கி‌.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…! வானிலை மையம் எச்சரிக்கை.‌‌..!

27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் வரும் 26 மற்றும்‌ 27 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌
குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல விளையாட்டு வீரர்.‌.‌.! வெளியான புகைப்படம்...!

Tue Jan 24 , 2023
முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் நிக் கிர்கியோஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்தை தனது சமூகத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிக் கிர்கியோஸ் ஜனவரி 16 அன்று, டென்னிஸ் சார்பு கிராண்ட் ஸ்லாமில் இருந்து விலகுவதாக அறிவித்தார், முழங்கால் பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் போட்டியிடுவதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகும் வீடியோவை தனது […]

You May Like