fbpx

Rain: அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக, இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 8-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிகரித்த வாகன ஏற்றுமதி...! வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு...!

Sun Feb 5 , 2023
2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த […]
”பழைய வாகனங்கள் வைத்திருந்தால் இனி இதுதான் நடக்கும்”..!! மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

You May Like