fbpx

காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மிதமான மழைக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை., வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இனி வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்... இந்திய ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..

Tue Feb 7 , 2023
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணத்தின் போது இனி, வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனம், ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. வாட்ஸ்அப் மூலம் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை […]

You May Like