தமிழகத்தில் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்க கூடும். சென்னையில் படிப்படியாக வெப்ப தாக்கம் அதிகரிக்கும் வரும் நாட்களில் 3 டிகிரி செல்சியசில் இருந்து 4 டிகிரி வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
