fbpx

#Rain: இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை மழை…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வேகமாக உருகும் பனிப்பாறைகள்.. இந்திய கடலோர நகரங்களுக்கு ஆபத்து.. அதிர்ச்சி தகவல்..

Mon Feb 27 , 2023
இன்றைய நவீன யுகத்தில் தொழிற்சாலைகள் பெருகியது, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கடல்நீர்மட்டம் உயர்வு என்பதுல், உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்ட […]

You May Like