fbpx

வெப்பத்திற்கு மத்தியில் 2 நாட்களுக்கு மழை…! கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும்…!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வரும் 5, 6 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வித்தியாசமான இரட்டையர்கள்!... கின்னஸ் சாதனை படைத்த ஆச்சரியம்!... விவரம் உள்ளே!

Fri Mar 3 , 2023
உயர அளவு வித்தியாசத்தில் இருக்கும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் ஒகாயாமாவை சேர்ந்த யோச்சி மற்றும் மிச்சி கிகுச்சி என்ற இரட்டை சகோதரிகள். இருவருக்கும் தற்போது 33 வயது ஆகிறது. யோச்சி என்றவர் 162.5 செ.மீ (5.4 அடி) உயரமும், மிச்சி என்றவர் 87.5 செ.மீ (2.10 அடி) உயரமும் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிறந்த […]

You May Like