fbpx

பொது மக்களே எச்சரிக்கையா இருங்க… இந்த மாவட்டத்தில் எல்லாம் வெளுத்து வாங்கப் போகும் கனமழை‌…!

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி வரை நாளைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..! தயார் நிலையில் மீட்புப் படை..!

வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை லட்சத்தீவுப் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அரசியல் வட்டாரத்தில் நிலவும் பரபரப்பு... வரும் அக்டோபர் 17 அன்று நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல்...!

Mon Aug 29 , 2022
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17, அன்று நடைபெறும் என செய்தி வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதியும் நடைபெறும். காங்கிரஸ் வேலை கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான CWC […]

You May Like