fbpx

மக்களே‌..‌ தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8 மற்றும் 9-ம் ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதை ஒட்டிய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா.? இளைஞர்களே கவனம்..!!

Mon Mar 6 , 2023
சமீபத்தில் வெளியாகி மக்களை அதிகமாக கவர்ந்த தமிழ் படங்களில் ஒன்றுதான் ’லவ் டுடே’. அதில் கதாநாயகன் எப்போதும் செல்போனை பயன்படுத்துவதற்காக அவரது தாயார் கதாநாயகனை வசை பாடுவார். சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனமாகும். பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது என்று தாயார் கூறும்போது அனைவரும் கைதட்டி சிரித்தாலும் அனைவருக்குள்ளும் இந்த பயம் எப்போதும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. மனிதனின் 3-வது கை போல ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்ட […]

You May Like