fbpx

மக்களே.‌.. தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…! வானிலை ஆய்வு மையம் தகவல்…!

19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலை..!! சம்பளம் ரூ.63,000 வரை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Thu Mar 16 , 2023
தமிழ்நாடு அஞ்சல்துறையில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் ஊர்தி சேவை மூத்த மேலாளர் அலுவலம் வெளியிட்டுள்ளது. பதவி கார் ஓட்டுநர்general central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts காலியிடங்கள் 58 கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் இலகு ரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]

You May Like