fbpx

உஷார்…! தமிழகத்தில் 22-ம் தேதி வரை மழை தொடரும்…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 21-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 22-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் விடுமுறையா..? மிகப்பெரிய மாற்றங்கள்..!! வங்கி வாடிக்கையாளர்களே கவனம்..!!

Sun Mar 19 , 2023
நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகைகள், உள்ளூர் திருவிழாக்கள், பொதுவிடுமுறை என இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாநிலத்தில் என்றென்று வங்கி விடுமுறை என்பதைத் தெரிந்து கொண்டு வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். மார்ச் மாதத்துடன் நடப்பு நிதியாண்டு முடிவடைய உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு, ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில் வங்கி […]

You May Like