fbpx

#Rain Alert: தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி வரை மழை தொடரும்…!

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

இனி நோ கவலை...! 72 மணி நேரத்திற்குள் சேவையை மீண்டும் வழங்க TRAI அதிரடி உத்தரவு...!

Wed Mar 29 , 2023
தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது இயற்கை பேரிடர்கள் காரணமாகவோ தொலைத்தொடர்பு சேவையில் பெரும் தடங்கல் ஏற்படும்போது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அதனை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் தெரிவிப்பதில்லை என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் நாள் கணக்காக இந்தப் பெரும் தடை நீடிப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தரமான சேவைகள் கிடைப்பதில்லை. இந்தப் பெரும் தடைகளுக்கான அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்ள, உள்ளூர் […]

You May Like