fbpx

தமிழகத்தில் இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் வரும் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

இல்லத்தரசிகளுக்கு ஷாக்...! அமுல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு...!

Sun Apr 2 , 2023
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் சந்தைகளில் அமுல் பாலின் விலைகள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன, என்று கூட்டுறவு பால் விற்பனை […]

You May Like