fbpx

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை…? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நிலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2 முறையும் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயமில்லை!… மத்திய அமைச்சர் விளக்கம்!

Tue Oct 10 , 2023
இருமுறை பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் முதல் பொது தேர்விலேயே நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள், 2வது முறை தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்களித்துள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் புதியபாடத்திட்ட முறையை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த முறைப்படி 10   மற்றும் 12ம் வகுப்பு   மாணவர்களுக்கு   ஆண்டுக்கு இருமுறை பொது […]

You May Like