fbpx

மக்களே ஜாக்கிரதை… வரும் 26-ம் தேதி வரை கனமழை பெய்யும்…! எந்தெந்த மாவட்டத்தில்…?

தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25,26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் வரும் 25-ம் தேதி குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 26-ம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்... குழந்தை தொழிலாளர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்...!

Sat Jul 23 , 2022
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் “பொழுதுபோக்கு தொழில்துறை மற்றும் வணிக ரீதியான பொழுதுபோக்கு செயல்பாடு ஆகியவற்றில் குழந்தைகள் பங்கேற்பை ஒழுங்குபடுத்தும்  வழிகாட்டு நெறிமுறைகளை” வெளியிட்டுள்ளது. “ஊடக வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தத்திற்கான” ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையுடன் புதிய சட்டங்கள், கொள்கைகள் குழந்தைகளின் நல்லார்வம் ஆகியவற்றை இணைத்து இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் இணையதளத்தில் https://ncpcr.gov.in/ வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் […]

You May Like