fbpx

65 கி. மீட்டர்‌ வேகத்தில் சூறாவளி காற்று…! யாரும் கடலுக்கு போக வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 28-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌.

இன்று குமரிக்கடல்‌ பகுதிகள்‌,மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள்‌, மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால்‌ மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு போட்டவர் முன்னாள் அதிபர் ஒபாமா...! நிர்மலா சீதாராமன் விமர்சனம்...!

Mon Jun 26 , 2023
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் நிலை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்பொழுது எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

You May Like