fbpx

16,17 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை…! சென்னை வானிலை மையம் கணிப்பு…!

16 மற்றும் 17-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக நாளை கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16 மற்றும் 17-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

பெற்றோர்களே உஷார்...! Adenovirus பாதிப்பால் மேலும் 4 குழந்தைகள் உயிரிழப்பு...!

Tue Mar 14 , 2023
அடினோ வைரஸ் பாதிப்பால் கொல்கத்தா மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் அடினோ வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், கொல்கத்தா மருத்துவமனையில் மேலும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில், அடினோவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதில், நான்கு குழந்தைகளும் இருமல், சளி மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சனைகள் போன்ற வைரஸ் தொடர்பான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் முதலமைச்சர் முதல்வர் மம்தா […]

You May Like