fbpx

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை… எல்லாம் எச்சரிக்கையா இருங்க…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெரும் அதிர்ச்சி.. முன்னாள் அமைச்சர் உடல் நலக்குறைவால் காலமானார்...! அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Wed Sep 14 , 2022
கேரள முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.எம்.ஜோசப் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கேரள முன்னாள் வனத்துறை அமைச்சரும், ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான பேராசிரியர் என்.எம்.ஜோசப், கோட்டயத்தில் உள்ள பாலா மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈ.கே.நாயனார் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் 1987 முதல் 1991 வரை வனத்துறை அமைச்சராக […]

You May Like