சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா தட்டிச்சென்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள், 16 இணைகள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்கள் .
நேற்று நடைபெற்ற அரையிறுதியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 64 வது இடத்தில் உள்ள கேட்டி ஸ்வான் என்ற வீராங்கனையுடன் மேக்டா லினெட் மோதினார். ஸ்வான் பாதியில் வெளியேறியதால்இறுதிப் போட்டிக்குள் மேக்டா நுழைந்தார்.
இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் லிண்டாவும் போலந்து நாட்டின் மேக்டாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லிண்டா புரூவில் தோவா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.