fbpx

கஸ்டமர் போல சென்ற போலீஸ்! ஆன்லைன் விபச்சார ரெசிப்ட் கேட்ட பியூட்டி பார்லர் நிர்வாகி!

சென்னையில் சொகுசு விடுதி ஒன்றில் அழகு சாதன நிலையம் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் செய்து வந்த கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இவர்களிடமிருந்து ஐந்து வட மாநில பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஹைடெக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டினர். ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து அதன் பிறகு கஸ்டமர்களை பியூட்டி பார்லர் வர வைத்து அங்கு வேலை செய்யும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து கஸ்டமர் போல காவல் அதிகாரி ஒருவர் பியூட்டி பார்லர் சென்று இருக்கிறார். அப்போது விபச்சாரம் தொடர்பாக அவர் விசாரித்ததில் ஆன்லைனில் பணம் கட்டிய ரசீதை கேட்டிருக்கின்றனர். இதனை வைத்து அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தது காவல்துறை. மேலும் அவர்களிடமிருந்த ஐந்து வட மாநில பெண்களையும் மீட்டிருக்கிறது. மேலும் இதுபோல ஹைடெக் முறையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாக பாலியல் புரோக்கர்கள் பெண்களுக்கு வலை விரித்து இருப்பதாகவும் இது தொடர்பாக பல புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rupa

Next Post

அமெரிக்காவுக்கு புது ரூட்டில் சட்ட விரோதமாக போக முயன்ற குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

Sun Feb 26 , 2023
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர்கள் பிரிஜிகுமார் மற்றும் பூஜா தம்பதியினர். இவர்களுக்கு 11 வயதில் தன்மென் என்ற மகன் இருக்கிறான். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற கடந்த வருடம் முயற்சி செய்து இருக்கிறார். இதற்காக சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கும் செல்ல ஏற்பாடு செய்யும் ஏஜெண்டுகளை நாடி […]

You May Like