fbpx

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 24 முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

மத்திய அரசு வழங்கும் ரூ.20,000 உதவித்தொகை...! நீங்களும் பெறலாம்...! முழு விவரம் இதோ...!

Thu Mar 23 , 2023
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. மீன்வளர்த்தெடுக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒரு அலகுக்கு ஆகும்‌ செலவின தொகை ரூ.3,00,000 ல்‌ பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம்‌ ரூ. 20,000 வழங்கப்பட உள்ளது. நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்க்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒரு அலகிற்கு ஆகும்‌ செலவின தொகை ரூ.8,00,000 ல்‌ பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம்‌ ரூ.3,20,000 மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பயனாளிகளுக்கு 60% மானியம்‌ ரூ.4,80,000 […]

You May Like