fbpx

சிக்கன் சூப் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா….? சரி நீங்களும் சாப்பிட்டு பாருங்களேன்….!

பலர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அதிலும், சிலர் சிக்கன் சூப்பை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சிக்கன் சூப்பை விரும்பி சாப்பிடுபவர்கள் அதன் நன்மை என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படி என்றால் இது உங்களுக்கான செய்திதான்.

சிக்கன் எலும்புகளில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆகவே சிக்கனில் சூப் செய்து சாப்பிடுவதன் மூலமாக, நாம் உடலில் இருக்கின்ற பல்வேறு எலும்புகளை வலிமையாக வைத்திருக்கலாம்.

இந்த சிக்கன் சூப் செய்து சாப்பிடுவதன் மூலமாக, உடலில் இருக்கின்ற தேவையில்லாத கொழுப்புகள் வெகுவாக குறைகிறது. அதாவது, சூப்பில் இருக்கின்ற சிக்கனை அகற்றிவிட்டு, வெறும் சாறினை மட்டும் பழக வேண்டும். இப்படி சிக்கன் சூப்பை சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு குறைந்து, உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிக்கனில் இருக்கின்ற புரதங்கள் ரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆகவே சிக்கனில் சூப் செய்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

சிக்கனில் புரதம், அமினோ, அமிலங்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. இது தசை வளர்ச்சிக்கும், மற்ற திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஆகவே நாள்தோறும், ஒரு கப் சிக்கன் சூப் சாப்பிடுவதன் மூலமாக தசை வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாள்தோறும் ஒரு கப் சிக்கன் சூப் சாப்பிடுவதன் மூலமாக, நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவைப்படும் ஊட்டச்சத்து வெகுவாக கிடைக்கின்றது. ஆகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மழைக்காலத்தில், எல்லோருக்கும் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த சமயத்தில், மிளகு சற்று அதிகமாக போட்டு, சிக்கன் சூப் செய்து சாப்பிடுவதால், மிக விரைவில் சளி மற்றும் காய்ச்சல் குணமாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Next Post

தினமும் பாதாம் சாப்பிடுகிறீர்களா? அப்படின்னா ஜாலிதான்….! இதில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா….?

Sun Aug 20 , 2023
நாள்தோறும் டிரை ஃப்ரூட்ஸ் என்று சொல்லப்படும் பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், தினசரி பாதாம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நன்மை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிட்டால், பல நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த பாதாமை ஊற வைத்து, காலையில் அதன் […]

You May Like