55 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வரால் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் 2024-2025 நடப்பு நிதியாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், இலத்தூர், மதுராந்தகம், புனிததோமையார்மலை, திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய 7 வட்டாரங்களில் உள்ள 46 ஊராட்சிகளில் 55 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3,402 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று தொடங்கப்படவுள்ளது.