fbpx

பிரச்சாரத்திற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகளின் திருமணத்தில் முதல்வர் முக.ஸ்டாலின்..!! குவியும் வாழ்த்து..!!

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே அந்த நபர் போக்சோ வழக்கில் கைதானார். இதனால் ஐஸ்வர்யா அவரின் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடன் வாழ விருப்பம் இல்லாததால் விவகாரத்து பெற்ற ஐஸ்வர்யாவுக்கு 2-வது திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அந்த வகையில், தருண் கார்த்திகேயன் என்பவருடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சங்கர், தனது மகளின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு பிசியான வேலைகளுக்கு மத்தியிலும் திருமணத்திற்கு சென்று மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read More : பெண்களுக்கு எந்த வயதில் செக்ஸ் மீதான ஆசை அதிகரிக்கும்..? ஆய்வு முடிவில் வெளியான ஆச்சர்ய தகவல்..!!

Chella

Next Post

தேர்தல் பரப்புரைக்கு விமானம், ஹெலிகாப்டரில் வரும் தலைவர்கள்..!! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வாடகை தெரியுமா..?

Mon Apr 15 , 2024
நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ஒற்றை இஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.5 […]

You May Like