fbpx

”தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்”..! சி.வி.சண்முகம் காட்டம்

ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை எதையும் செய்யவில்லை. மேலும், பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் திட்டத்தினை பறித்த அரசாகவும், அம்மா இருசக்கர வாகன திட்டத்தை நிறுத்தி, அம்மா உணவகத்தை முடக்கியுள்ள குற்றம்சாட்டினார்.

”தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்”..! சி.வி.சண்முகம் காட்டம்

திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளது. கொரானோ காலத்திலும் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஏழை மக்களின் பணத்தை திமுக அரசு கொள்ளை அடித்து வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, தானியம், பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் 5 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஏன் 5 சதவிகித வரி விதிப்புக்கு நிதி அமைச்சர் எதிர்க்கவில்லை.

”தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்”..! சி.வி.சண்முகம் காட்டம்

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கனவு உலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடத்தில் இருந்த நிர்வாகத் திறமை தற்போதைய முதலமைச்சரிடம் இல்லை எனச் சாடினார். மேலும், இன்று வீட்டு உபயோக மின்சார கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அடுத்து, விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்தச் சொல்வார்கள் எனவும் மத்திய அரசை எதிர்க்கும் அரசாக திமுக அரசு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம், கலவரம் செய்யலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் எனக் கூறினார்.

”தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்”..! சி.வி.சண்முகம் காட்டம்

மேலும், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏன் அமைச்சர்கள் சென்று மாணவியின் குடும்பத்தாரைச் சந்திக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயல்வதாகவும், தினந்தோறும் காவல் பணியைச் செய்யாமல் நடைப்பயிற்சியைச் செய்யும் டிஜிபி தமிழ்நாட்டில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டினார்.

Chella

Next Post

நூற்பாலை விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள்.. தப்பித்து காவல் நிலையம் ஓடி வந்த அதிர்ச்சி சம்பவம்..!

Mon Jul 25 , 2022
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதி இருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, பாபு சாண்டா என்ற புரோக்கர் நூற்பாலையில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். அந்த வட மாநில தொழிலாளர்கள் நூட்பாலையில் உள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த, ரீத்தா முனாக்கூர், போர்சா ராணி ஜெயா என்ற இரண்டு இளம் […]

You May Like