fbpx

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் உயிரிழப்பு..‌.! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்…!

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரள மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் நேற்று காலமானார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; சி.பி.ஐ.எம் தலைமைக் குழு உறுப்பினரும், மூன்று முறை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.

கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன், 1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Vignesh

Next Post

ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு...! உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்...!

Sun Oct 2 , 2022
பொங்கல் பரிசுத் தொடர்பாக 3 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை […]

You May Like