காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல்பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கவுரவக் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்படைத்தார்.. ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசு தலைவர் கொடி.. இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே குடியரசு தலைவரின் கொடி.. தென்மாநிலங்களில் தமிழகமே இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம்..சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளை கொண்டு கொடி கெளரவம் வழங்கப்படுகிறது..
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் “ குடியரசு தலைவரின் கவுரவ கொடியை பெற்றிருக்கிறோம்.. ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்கே இது பெருமையளிக்கிறது.. 160 ஆண்டு கடின உழைப்பிற்கான அங்கீகாரமே இது.. இந்தியாவுக்கே முன்னாடியாக தமிழக காவல்துறை திகழ்கிறது..தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கி சூடு இல்லை.. காவல்நிலைய மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளது.. ஆனால் முற்றிலும் இல்லை என்று நான் சொல்லவில்லை.. காவல்நிலைய மரணங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்கி தாருங்கள்.. குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும்..
பாலியல், போக்சோ சட்டங்களின் கீழ் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. காவல்துறை அதிகாரிகள் கவலையின்றி பணியாற்றுவதற்கான சூழலை அமைத்து தர இந்த அரசு தயாராக உள்ளது.. குடியரசு தலைவரின் விருது பெற்றிருக்கும் தமிழக காவல்துறையினர், தங்கள் காக்கி சட்டையில் அதன் அடையாளமான கொடியை அணிந்து செல்வார்கள்..
காவலர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தியை சொல்ல விரும்புகிறேன்.. தமிழ்நாடு காவல் துறை தொடங்கி 160 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், குடியரசு தலைவர் வண்ணக்கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல்பதக்கம் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. மக்களை காப்போம்.. மகத்தான மாநிலமாக தமிழகத்தை உயர்த்து காட்டுவோம்..” என்று தெரிவித்தார்..