fbpx

#Breaking : முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை.. மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்…

முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..

கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.டி. ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது..

முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு தினங்களுக்கு காவேரி மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருவார் என்று மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் ஸ்டாலினின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.. நாளை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது..

இந்நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில் “ முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைந்து வருகிறார்.. மருத்துவ பரிசோதனை அடிப்படையில் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் சில நாட்கள் ஸ்டாலின் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நலம் விசாரித்து, முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மோடி கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை..? சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..

Fri Jul 15 , 2022
தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.. தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கின்றனர்.. ஆனால் இது ஆகம விதிகளுக்கு எதிரானது.. எனவே ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத […]
இனியும் சும்மா இருக்க மாட்டோம்..! கொந்தளித்த தமிழக அரசு..! கடைகள் மீது பாயும் அதிரடி நடவடிக்கை..!

You May Like