fbpx

முதல்வரிடம் என்னை திட்டு வாங்க வைக்காதீர்கள் – அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ 1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஸ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார். இதே போல் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூபாய் 47 லட்சத்து 19,000 செலவில் குப்பை அள்ளும் வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் 1 லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினார்.

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் பொதுமக்கள் மனுக்கள் வழங்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ருபாய் 4லட்சம் 79 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை சார்பில் திருச்சி மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கத்திற்கு ரூ 5,25,000 நத்திட்டங்களை வழங்கினார். மொத்தமாக ஒரு கோடியே 8லட்சத்து 33ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியாபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மேயர் அன்பழகன், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார. இதனை தொடர்ந்து பூலையாறு, புள்ளம்பாடி பகுதியில் உள்ள நந்தியாறு ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு வருகிறார். தொடர்ந்து விமான மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இது தேவையா முதல்வர் என்னை கூப்பிட்டு திட்டுவார் என நகைச்சுவையாக பேசிவிட்டு கடந்து சென்றார்.

Maha

Next Post

கோவில்களில் திருவிழாவிற்கென விழாக்குழு அமைக்க கூடாது- உத்தரவு பற்றி தெரியுமா ?

Wed Jun 7 , 2023
மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோவில் திருவிழாக்களின் போது, எந்த தனிநபரும் கமிட்டி அமைக்க கூடாது என ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் […]
தலைமை மருத்துவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட நீதிபதி..! மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி..!

You May Like