fbpx

முதலமைச்சரின்மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்…! இணையத்தில் வெளியான முடிவுகள்….!

முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 07.10.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,27,673 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.

இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 / வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவி தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 / – வழங்கப்படும். இத்தேர்வின் முடிவுகள் 01.12.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

எனவே இந்த தேர்வு எழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணாக்கர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"எப்புட்றா.?" உங்கள் வயது மற்ற கிரகங்களில்..? ஒரு சின்ன கணக்கு போட்டு பார்ப்போமா.!

Wed Nov 29 , 2023
ஒருவரது வயது என்பது அவரது பிறந்த வருடம் மற்றும் தேதி ஆகியவற்றில் இருந்து கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் 01.01.2000 ஆண்டில் பிறந்திருந்தால் தற்போது அவரது வயது 23 வருடங்கள் மற்றும் 91 நாட்கள் இருக்கும். மக்களின் அடிப்படையில் பார்த்தால் 8,732 நாட்கள் என இருக்கும். அவரது அடுத்த பிறந்த நாள் 01.01.2024 தேதியில் வரும். ஆனால் இந்த கணக்கு நமது பூமியை சுற்றி இருக்கும் மற்ற அனைத்து கிரகங்களிலும் இதுபோன்று […]

You May Like