தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு சாகும் வரை சிறையில் இருக்க தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜேம்ஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது. குற்றம் உறுதிசெய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் சிறுமிக்கு இரக்கமின்றி பாலியல் தொல்லை கொடுத்த ஜேம்சுக்கு சாகும் வரை சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்தது.
இதே போல புதுக்கோட்டை விராலி மலை அருகே பதினைந்து வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 2021ம் ஆண்டு கண்ணன் என்ற நபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்ததாக மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். ரூ.20,000 அபராதமும் விதித்தனர்.