சீனாவின் மனித வளத்துறை அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் 12.44 மில்லியன் நகர்ப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கி அந்த ஆண்டின் இலக்கை எட்டியதாக அறிவித்திருக்கிறது. இன்னும் நடப்பு ஆண்டில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு இலக்குகளை தீவிர முயற்சியினால் எட்ட வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு இலக்குகளை எட்டிய போதும் தொழிலாளர் சந்தையில் அது பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த வருடத்திற்கான பாராளுமன்ற கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான வேலைவாய்ப்பு இலக்கு குறித்த நீங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மனித வள மேம்பாட்டு துறையின் துணை இயக்குனர் யுன் டோங்லாய் 2024 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்து பதிவு செய்திருக்கிறார். இந்த ஆண்டில் நிலவும் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான சமூக எதிர்ப்பார்ப்புகளால் வேலை வாய்ப்பு துறையின் மீதான அழுத்தம் தொடர்வதாக தெரிவித்து இருக்கிறார். வேலைவாய்ப்பு சந்தை ஸ்திரப்படுத்த கூடுதல் முயற்சிகள் தேவை என்பதையும் ஒப்புக் கொண்டார்.
குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இலக்குகளில் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டியது அவசியத்தை மனிதவளத்துறை வலியுறுத்தி இருக்கிறது.கல்லூரி பட்டதாரி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
சீனாவின் பொருளாதாரத்தில் 5.2% வளர்ச்சி இருந்த போதும் அரசாங்கம் அவற்றின் இலக்குகளை அடைவது சொத்து சந்தையில் ஏற்பட்ட சரிவு நுகர்வோர் மற்றும் வணிகம் தொடர்பான கடனை தள்ளுபடி செய்தல் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கான நிதி நிலையை அதிகரித்தல் போன்றவற்றில் சவால்களை சந்தித்தது. மேலும் சீனாவில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி வேலையில்லாதவர்கள் 5.1% இருப்பதாக தெரிவிக்கிறது. இது தற்போது மிகவும் பொருளாதார நிலை ஏற்று தன்மையை காட்டுவதாக அமைந்திருக்கிறது. எனினும் கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 2022 ஆம் ஆண்டு இருந்ததை விட தற்போது வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பு சவால்களை எதிர்கொள்ளும்போது பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான சீனா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான இலக்குகளை அமைத்து அதன் அடிப்படையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.