fbpx

CHINA | சானிட்டரி பேட் போன்ற வடிவமைப்பில் சீனாவில் கட்டப்படும் ரயில் நிலையம்.!! இணையதளத்தில் வைரலான புகைப்படம்.!!

CHINA: சீனாவின் நாஞ்சிங் வடக்கு ரயில் நிலையத்திற்கான முன்மொழியப்பட்ட வடிவமைப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. மேலும் இந்த புகைப்படம் உயிரோட்டமான விவாதங்களைத் தூண்டி இருக்கிறது. இந்த ரயில் நிலையம் தொடர்பான பெரும்பாலான விவாதங்கள் அதன் செயல்பாடு மற்றும் பட்ஜெட் பற்றியதாக இல்லாமல் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு பற்றியதாக இருக்கிறது.

பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு, வடக்கு நான்ஜிங் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக பிசிசி தெரிவித்திருக்கிறது. எனினும் நெட்டிசன்கள் இந்த ரயில் நிலையத்தின் தோற்றம் ஒரு ராட்சத சானிட்டரி பேட் போல் உள்ளது தெரிவித்துள்ளனர். இந்த வடிவமைப்பை பிளம் ப்ளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளனர்.

நான்ஜிங் டெய்லி செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின் படி நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்திற்கான ஆரம்ப வடிவமைப்பு ஜியாங்சு மாகாணம் மற்றும் சீனா(CHINA) ஸ்டேட் ரயில்வே குழுமத்தின் அனுமதி பெற்று இருக்கிறது எனவும் இந்த ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் 2024 ஆம் வருடத்தின் முதல் பாதியில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மர கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பல்வேறு பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு கலாச்சார பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தை கலந்து இந்த ரயில் நிலையம் கட்டப்பட இருக்கிறது.

இந்தத் திட்டம் சுமார் 20 பில்லியன் சீன யுவான்(23 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. மேலும் 37.6 சதுர கிலோமீட்டர் (14 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த ரயில் நிலையம் சீனா கட்டிடக்கலையின் ட்ரெண்டை பின்பற்றுகிறது. தனித்துவமான கட்டிடக்கலை வடிவங்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்க்கிறது. பெய்ஜிங்கில் உள்ள சிசிடிவி தலைமையகத்தின் கட்டிட வடிவமைப்பு புகைப்படங்கள் சமூக வலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்து விமர்சிக்கப்பட்டன. சிலர் அதன் வடிவத்தை “பெரிய குத்துச்சண்டை ஷார்ட்ஸ்” என்று விமர்சனம் செய்தனர்.

Read More: அடுத்த 5 நாட்கள்..!! மக்களே வெளிய போகாதீங்க..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Next Post

DmK-வை தோற்கடித்தால் தான் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும்...! வானதி சீனிவாசன்

Wed Apr 17 , 2024
மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். இது குறித்து பாஜக எம்எல்ஏ வாணலி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் […]

You May Like