அடுத்த 5 நாட்கள்..!! மக்களே வெளிய போகாதீங்க..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏப்ரல் 20ஆம் தேதி வரை பல மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். பொதுமக்கள் லேசான, வெளிர் நிற, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். தலையை மறைக்க துணி, தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தவும். சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகவும், மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கும்.

மேலும் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். பலத்த காற்றும் வீசும். டெல்லியில் ஏப்ரல் 17ஆம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசும். ஏப்.18ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஏப்ரல் 19ஆம் தேதியன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.3,56,000 கிடைக்கும்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!

Chella

Next Post

கூகுள் ஊழியர்கள் கைது..! இஸ்ரேலுடன் வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என போராட்டம்..!

Wed Apr 17 , 2024
இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திய கூகுள் ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். நியூயார்க் நகர அலுவலகம் மற்றும் சன்னிவேல் கலிபோர்னியா அலுவலகம் உட்பட பல இடங்களில் இருந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்களின் போராட்டம் வந்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் […]

You May Like