கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு மருத்துவர் அவர்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று பிரபல தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, மருத்துவமனைகளில் அல்லாமல் வீட்டில் நிகழும் இறப்புகளை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்ப்பதை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 டிசம்பர் தொடக்கத்தில் கொரோனா தொடர்பான 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சீனா வெளிப்படுத்தியது. 2019 இல் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இறப்பு எண்ணிக்கை சுமார் 5,000 ஆக உள்ளது என்ற தகவலை சீனா அரசு கூறி வருகிறது. VAA இன் படி, ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்ததாக கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவை விரிவான” தரவுகளுக்கு வலியுறுத்தியது.
சீனாவில் கோவிட் நோய்த்தொற்றுகள் டிசம்பர் இறுதியில் அதிகரிக்கத் தொடங்கி மருத்துவமனைகள் நிரம்பத் தொடங்கின. பல நோயாளிகள் படுக்கைகளைக் காணவில்லை மற்றும் தரையில் தூங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது. தகனம் செய்யும் இடங்கள் நிரம்பியிருந்தன. இந்த நிலையில் கொரோனா இறப்பு என்னை கைகளை குறைத்து காட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.